இன்று அதிகாலை துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
துருக்கியின் தொழில் நகரமாக அறியப்படும் காசியோன்டேப் நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 15 நிமிடங்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் அங்கே அதிகாலையில் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது.
நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் மேலும் சில நாட்கள் ஏன் ஒருவாரத்திற்கு கூட நீடிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்று துருக்கி. அந்த நாட்டில் கடந்த 1939 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் பேரனர்த்தமாக காணப்படுகின்றது