செய்திகள்

32 வயதான இளைஞர் கொரோனாவுக்குப் பலி.!

நாட்டில் மேலும் 28 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலியில் மாத்திரம், 7 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தவிர களுத்துறை, மாத்தறை, ருவன்வெல்ல,அகலவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கல்பாத பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் 40 முதல் 97 வயதுக்குட்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com