டி சந்ரு
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார் .
குறித்த நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி குறித்த பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததோடு, 53 பேர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக கனரக வாகனங்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
இவ்வீதி தொடர்பாக எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது முக்கிய கவனம் செலுத்தி நிரந்தர முடிவு எடுக்கப்படும் எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.