வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, திருநாவற்குளம் அருள்மிகு ஐயனார் திருக்கோயில்
காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் ஐயனார்
கவலையின்றி நாம் வாழ நல்ல வழி அமைத்துத் தந்தருள்வார்
நம்பியவர் அடி தொழுதால் நலன்கள் நமைச் சேர்ந்துவிடும்
திருநாவற்குளம் கோயில் கொண்ட ஐயனார் துணைகிட்டிவிடும்
பெருவீதி மருகிருந்து காவல் செய்யும் ஐயனார்
பெருமையுடன் வாழ வழி அமைத்துத் தந்தருள்வார்
நம்பியவர் அடி தொழுதால் நலன்கள் நமைச் சேர்ந்துவிடும்
திருநாவற்குளம் கோயில் கொண்ட ஐயனார் துணைகிட்டிவிடும்
கொடுஞ் செயல்கள் தடுத்தெம்மை காத்தருளும் ஐயனார்
தொல்லையின்றி நாம் வாழ வழி அமைத்துத் தந்தருள்வார்
நம்பியவர் அடி தொழுதால் நலன்கள் நமைச் சேர்ந்துவிடும்
திருநாவற்குளம் கோயில் கொண்ட ஐயனார் துணைகிட்டிவிடும்
வன்னிப் பெருநிலத்தில் வீற்றிருக்கும் ஐயனார்
வருந் துன்பம் தடுத்து நாம் வாழ வழி அமைத்துத் தந்தருள்வார்
நம்பியவர் அடி தொழுதால் நலன்கள் நமைச் சேர்ந்துவிடும்
திருநாவற்குளம் கோயில் கொண்ட ஐயனார் துணைகிட்டிவிடும்
விழி மலர்ந்து நின்றிருந்து காத்தருளும் ஐயனார்
வீழ்ச்சியில்லா நிலை தந்து நாம் வாழ வழி அமைத்துத் தந்தருள்வார்
நம்பியவர் அடி தொழுதால் நலன்கள் நமைச் சேர்ந்துவிடும்
திருநாவற்குளம் கோயில் கொண்ட ஐயனார் துணைகிட்டிவிடும்
சூழவரும் கொடுமை, பகை சிதறடிக்கும் ஐயனார்
நோய் கொடுமை அண்டா நிலை தந்து வாழ வழி அமைத்துத் தந்தருள்வார்
நம்பியவர் அடி தொழுதால் நலன்கள் நமைச் சேர்ந்துவிடும்
திருநாவற்குளம் கோயில் கொண்ட ஐயனார் துணைகிட்டிவிடும்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.