விளையாட்டு

34 வது தேசிய இளைஞர் சேவை ரூபவாஹிணி சவால் கிண்ண தேசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டி கம்பஹாவில்..


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றோடு; இளைஞர் விவகார,விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து 34வது முறையாகவும் நடாத்தும் தேசிய இளைஞர் சேவை ரூபவாஹிணி சவால் கிண்ண தேசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டி இம்மாதம் 23ம் 24ம் திகதிகளில் கம்பஹா மாநகர சபை விளையாட்டு அரங்கிலும்; , தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலைய(சுமேத) உள்ளக விளையாட்டு அரங்கிலும் நடைபெறவுள்ளது.

நாடுபூராகவும் உள்ள இளைஞர் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும்; இளைஞர் யுவதிகளை இலக்காகக்கொண்டு இவ் சவால் கிண்ண பொட்டி நடாத்தப்படவுள்ளதுடன் இதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 26 நிர்வாக மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்; ஆண்கள் அணிகள் 26உம் பெண்கள் அணிகள் 26ம் பங்குப்பற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டித்தொடரின் ஆரம்பவிழா எதிர்வரும் 23ம் திகதி மு.ப 8.30க்கு பிரதேசத்தின் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்ஃ பணிப்பாளர்நாயகம் தமித்த விக்ரமசிங்க,இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் நாரகல மற்றும் தலைவர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க ஆகியோரின் தலைமையில் கம்பஹா மாநகர சபை விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

சிவராஜா -அறிவிப்பாளர்(தமிழ்)

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com