செய்திகள்

35,000 கிலோகிராம் நிறையுடைய கழிவுத்தேயிலை அடங்கிய இரண்டு கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அனுப்பப்படவிருந்த 35,000 கிலோகிராம் நிறையுடைய கழிவுத்தேயிலை அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கொழும்பு முனையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏற்றுமதி வசதிகளை திட்டமிடும் மத்திய நிலையத்தில் வைத்து கழிவுத்தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கழிவுத்தேயிலையின் பெறுமதி 35 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யும் போர்வையில் கழிவுத் தேயிலையை வௌிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளமை இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download