செய்திகள்மலையகம்

351 பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 02 ஏக்கர் வீதம் காணி வழங்க தீர்மானம்.

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணி பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (28.03.2019) பாராளுமன்ற கட்டிட தொகுதியில் குழு அறை இரண்டில் (2) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் கயன்த கருணாதிலக¸விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்¸பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்¸ பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் பெரேரா¸ கே.கே.பியதாச¸ வேலுகுமார்¸ பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர்¸ பெருந்தோட்ட மேற்பார்வை பிரிவின் பணிப்பாளர்¸ 22 பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள்¸ அரச பெருந்தோட்டங்களின் தலைவர்கள்¸ கல்வி அமைச்சின் கல்வி பணிப்பாளர் மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கான பணிப்பாளர் சு.முரளிதரன் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் கந்தையா பத்மநாதன்¸ மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்காக இரண்டு ஏக்கர் காணி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மிக விரைவாக இந்த காணிகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சு காணி அமைச்சு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு பெருந்தோட்ட கம்பணிகள் ஆகியன உள்ளடங்கும் வகையில் குழு ஒன்றை அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை மேலும் விரைவுபடுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பாக விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனும்¸ ஊவா மாகாணத்திற்கு பொறுப்பாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்¸ சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவும்¸ கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு பொறுப்பாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் அளவில் காணிகளை தேசிய நிகழ்வு ஒன்றின் மூலமாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்ஹ தiமையில் கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com