ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டில் நெல் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மீள அறவிடப்படாத வகையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிதி மானியத்தை விவசாய கணக்குகளில் வைப்பீடு செய்வதற்காக தேவையான தகவல்களை சரியான வகையில் வழங்காத பிரதேச விவாசாய சேவை அதிகாரிகளுக்கு கடுமையான ஒழுக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த நிதி மானியம் விவாசாய கணக்குகளில் வைப்பிடு செய்யப்படாமை தொடர்பில் விவசாய அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்தையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதுதொடர்பான விடயங்களை கேட்டறிந்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 800 கோடி ரூபா நிதி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வழங்கப்பட்ட போதிலும் உரிய காலப்பகுதியில் இதனை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்டவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த தாமதம் அதிகாரிகளினால் வேண்டுமென்ற மேற்கொள்ளப்பட்ட சீர்குழைப்பு நடவடிக்கை என தெரிவதாக விவசாய ஆணையாளர் நாயகம் எச்.எல்.எம்.ஏ அபேவர்தன தெரிவித்தார்.
விவசாய திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்த கணக்குகளில் 38 வீதம் தவறான கணக்கிலக்கம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றை சரி செய்வதற்காக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் 20 பேர் கொண்ட பணியாளர் குழாம் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.
இதேபோன்று இந்த விவசாய கணக்குகளில் 8 வீத கணக்குகள் இன்னும் சரிசெய்ய முடியாது இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விவசாய ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.