மலையகம்
கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்…

கண்டி வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி கண்டி வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றினால் மோதப்பட்ட நிலையில் மேற்படி நபர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் யார் என்பது பற்றி விபரங்கள் ஏதும் இல்லாத நிலையில் அடையாளம் காண சிரமமாக இருப்பதாகவும் பெரும் பாலும் தமிழ் மொழி பேசும் ஒருவராக இருக்கலாம் என சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், சடலம் கண்டி வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை அடையாளம் காட்ட பொதுமக்கள் உதவும் படியும் கண்டி பொலிஸ் நிலைய விபத்துக்கள் பிரிவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.