பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் வேலையைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 19 பெண்களும் , 3 ஆண்களும் அடங்குகின்றனர் .
அவர்கள் பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
தடுப்பு தொகுதி செயற்படாமல் போனமையினால் குறித்த லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமு தனராஜா