கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- கல்முனை மாநகரம் அருள்மிகு நாகதம்பிரான் திருக்கோயில்
துன்பங்கள் துடைத்தெறிந்து துயர்போக்கும் தம்பிரானே
தூய நல்ல வாழ்வுக்கு துணையிருக்க வேண்டுமைய்யா
பாதகங்கள் செய்வோரைப் பூண்டோடு அழித்திடவே
கருணை கொண்டு எழுந்திடைய்யா கல்முனையில் கோயில் கொண்ட நாகதம்பிரானே
தூயவர்கள் வாழ்வுக்குக் காப்பளிக்கும் தம்பிரானே
தொல்லையில்லா வாழ்வுக்குத் துணையிருக்க வேண்டுமைய்யா
கொடுமைகள் செய்வோரின் கொட்டத்தை அடக்கிடவே
கருணை கொண்டு எழுந்திடைய்யா கல்முனையில் கோயில் கொண்ட நாகதம்பிரானே
கடலலையின் ஓசையுடன் அமர்ந்திருக்கும் தம்பிரானே
கவலையின்றி நாம்வாழத் துணையிருக்க வேண்டுமைய்யா
கரவு மனங் கொண்டோரை இல்லாதொழித்திடவே
கருணை கொண்டு எழுந்திடைய்யா கல்முனையில் கோயில் கொண்ட நாகதம்பிரானே
நல்லவர்கள் வாழ்வுக்கு நலமளிக்கும் தம்பிரானே
நன்றியுடன் நாம்வாழத் துணையிருக்க வேண்டுமைய்யா
வேதனைகள் செய்வோரை வேரோடு அகற்றிவிட
கருணை கொண்டு எழுந்திடைய்யா கல்முனையில் கோயில் கொண்ட நாகதம்பிரானே
தமிழர்களின் தாயகத்தில் காட்சி தரும் தம்பிரானே
தவறின்றி நாம்வாழத் துணையிருக்க வேண்டுமைய்யா
தொல்லை கொடுப்போரைத் துடைத்து எறிந்துவிட
கருணை கொண்டு எழுந்திடைய்யா கல்முனையில் கோயில் கொண்ட நாகதம்பிரானே
வாழ்வுக்கு துணையாக இருந்தருளும் தம்பிரானே
வளங்கொண்டு நாம் வாழத் துணையிருக்க வேண்டுமைய்யா
வீண்பகைமை கொடுமைகளை வீழ்த்தி விடுவதற்கு
கருணை கொண்டு எழுந்திடைய்யா கல்முனையில் கோயில் கொண்ட நாகதம்பிரானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.