தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேகாலை அவிசாவளை பிரதான வீதியில் ஈரியகொல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் படுக்காயங்களுடன் கரவநெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தானது இன்று காலை (24/02) 8 .15 மணி அளவில் கேகாலை பிரதேசத்திலிருந்து அவிசாவளையை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும், அவிசாவளை பிரதேசத்திலிருந்து கரவநெல்ல பிரதேசத்தை நோக்கி பயணித்த இருசக்கர வண்டியும் அதற்குப் பின்னால் பயணித்த லாரியும் எதிரே வந்த தனியார் பஸ் வண்டியில் மோதியதில் இருசக்கர வண்டியில் பின்னால் பயணம் செய்த பெண் ஒருவரும் லொரி சாரதியும் படுகாயம் அடைந்து கரவநெல்ல ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பஸ் வண்டியின் சாரதியை தெஹியோவிட்ட பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
மேலதிக விசாரணையை தெஹியோவிட்ட பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.