பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்த நடுப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரினால் தனது மகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் தகப்பனாரினால் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் 48 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பிரபல கசிப்பு வியாபாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மிக நீண்ட காலமாக வெவெஸ்த்த நடுப்பிரிவு பகுதியில் பிரபல கசிப்பு வியாபாரி என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளதோடு மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா