வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்மன் திருக்கோயில்
காத்து அருளளித்து காவல் செய்யும் தாயே கருமாரி
வாழ்நாளில் உடனிருந்து வாழவைக்க வாருமம்மா
தேடியுன்னைச் சரணடைந்தோர் நலன்காக்க வேண்டும்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா
வன்னிப் பெருநிலத்தில் வீற்றிருக்கும் தாயே கருமாரி
தொல்லையின்றி வாழ்வதற்கு உடனிருந்து உதவுமம்மா
நாடியுன்னைச் சரணடைந்தோர் நலன்காக்க வேண்டும்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா
திசையெங்கும் அருள்பரப்பி தீவினைகள் களையும் தாயே கருமாரி
திசை காட்டி வழிநடத்த உடனிருக்க வாருமம்மா பாடியுன்னைப் போற்றுமெங்கள் நலன்காக்க வேண்டும்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா
உடல் நலமும், உளநலமும் காத்தருளும் தாயே கருமாரி
உடலுறுப்புகள் யாவையுமே சீராக்க அருள்தரவே வாருமம்மா
வாழும் மக்கள் மனக்கவலை போக்கி நலன்காக்க வேண்டும்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா
மருத நிலச் சூழலிலே வீற்றிருக்கும் தாயே கருமாரி
மாண்பு குன்றா வளவாழ்வைத் தருவதற்கு உடனிருக்க வாருமம்மா
அடி தொழுது தொழுமெங்கள் நலன்காக்க வேண்டும்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா
தெய்வத் திருமகளாய் தோன்றுகின்ற தாயே கருமாரி
தெளிவான மனவுறுதி கொண்ட பெருவாழ்வைத் தருவதற்கு உடனிருக்க வாருமம்மா
துணை நாடி உனை நாடும் எங்கள் நலன்காக்க வேண்டும்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.