...
செய்திகள்

400 கொள்கலன்கள் விடுவிப்பு

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.

எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருந்த 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை உறுதியளித்ததை போன்று அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை மத்திய வங்கி வழங்கினால், அதனை முழுமையாக ஒரு வாரத்திற்குள் விடுவிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen