செய்திகள்

4000 தேர்தல் சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது.

மாதம்பை பகுதியில் 4000 தேர்தல் சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சுவரொட்டிகளை, தேர்தல் தினமான இன்றைய தினம் ஒட்டுவதற்கு சந்தேகநபர் தீர்மானித்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அரசியல் கட்சியொன்றின் செயற்பாட்டாளர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button