சவுதி நிதியத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக அந்நாட்டு உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
மத்திய நடவடிக்கை மற்றும் மேற்கு ஆசிய விடயங்கள் தொடர்பிலான பணிப்பாளர், பொறியியலாளர் Eng. Mohammad Al-Masoud,( Director of Operations for Central and West Asia,) தலைமையிலான குழுவினரே தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த குழுவினர், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் Khalid Hamoud Alkahtani, கலந்து கொண்டார்.
இந்த குழுவினர் ,நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில், நீர், வலுசக்தி, சுகாதாரம்,வீதி அபிவிருத்தி, கல்வி ஆகியன தொர்பில் 12 திட்டங்களை சவுதி அரேபியா மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக அந்நாடு 424.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.