மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம் கண்டி நித்தவல – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
கண்டியிலே கோயில் கொண்ட மாரியம்மா
எம் சுற்றமெல்லாம் பெருமைபெற துணையிரம்மா
என்றும் அரவணைக்கும் முத்து மாரியம்மா
ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா
நித்தவல நல்லிடத்தில் கோயில் கொண்ட மாரியம்மா
நிம்மதியை நிரந்தரமாய் பெற்றுவிட துணையிரம்மா
என்றும் அன்பு செய்யும் முத்து மாரியம்மா
ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா
மலை சூழ்ந்த திருவிடத்தில் கோயில் கொண்ட மாரியம்மா
மாண்புடனே நாம்வாழ துணையிரம்மா
என்றும் எமைக் காத்தருளும் முத்து மாரியம்மா
ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா
கண்ணுச்சாமி ஆண்ட மண்ணில் கோயில் கொண்ட மாரியம்மா
கவலையின்றி நாம் வாழத் துணையிரம்மா
என்றும் எமக்கேற்றம் தரும் முத்து மாரியம்மா
ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா
மலையகத்தின் தலைநகரில் கோயில் கொண்ட மாரியம்மா
வெற்றி பெற்று நாம் வாழத் துணையிரம்மா
என்றும் வெற்றிதரும் முத்து மாரியம்மா
ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா
வளம் சூழ்ந்த பெருநிலத்தில் கோயில் கொண்ட மாரியம்மா
வாழ்வில் நலம் பெற்று வாழத் துணையிரம்மா
என்றும் துணிவுதரும் முத்து மாரியம்மா
ஏற்றவழி காட்டியெமக் கருளிடம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.