சமூகம்
1000 ரூபாய் அடிப்படை வேதனம் வழங்க இரண்டு நிறுவனங்கள் தயார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை வேதனம் வழங்கி, பெருந்தோட்டத்துறையை நடத்திச் செல்வதற்கு இரண்டு நிறுவனங்கள் தயாராக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில், 600 ரூபாவிற்கு மேல் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய வேளையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.