அருட்பணி. ச. யேசுதாசன் J.P ( அகில இலங்கை) கடந்த 25/11/2022 அன்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ். ஹிபதுல்லா முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். மன்னார், வஞ்சியன்குளம் என்னும் இடத்தை சேர்ந்த இவர் ஓர் கிளரேசியன் சபை துறவி ஆவார்.
இவர் தெனியாய, என்சல்வத்த, மருத மடு அன்னை ஆலயத்தில் உதவிப் பங்குத் தந்தையாகவும், தெ.மா/மாறை/என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளாராகவும் பணி புரிகிறார்.