பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் பெண்ணின் தாயும் பண்டாரவளை நகருக்கு வருகை தரும் போது குறித்த பெண்ணின் காதலனாகிய கல்கடபதன ஒத்த கடை பண்டாரவளை பகுதியை சேர்ந்த ஏழாவது இராணுவ பொறியியலாளர் பிரிவில் கடமை புரிந்து தற்போது இராணுவத்திற்கு செல்லாது தலைமறைவாகி இருந்த 23 வயதுடைய நபர் ஒருவரினால் அஸிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அஸிட் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் தாய் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு குறித்த பெண்ணுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.
23 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா