அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிதானஹேன குமாரபடிய அம்பகஸ்தோவ எனும் விலாசத்திற்குறிய இடத்தில் புதையல் தோண்டப்படுவதாக அம்பகஸ்தோவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது அம்பகஸ்தோவ பகுதியை சேர்ந்த மூவரும் லூணுவத்தைப் பகுதியை சேர்ந்த ஒருவருமாக நான்கு நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் குறித்த நால்வரும் வெளிமடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா