செய்திகள்

எட்டியாந்தோட்டை பகுதியில் பாரியளவிலான மண்சரிவு

கேகாலை, எட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட மலல்பொல பகுதியில் பாரியளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், வீடுகளில் வசித்த 17 பேரை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ உதவி அதிகாரி அனுஷ்க சமிந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெஹியோவிட்ட பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஐலா தோட்டத்தில் லயன் குடியிருப்புக்கு பின்புறத்தில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததில் அங்குள்ள வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com