லிந்துலை மெராயா தேசிய பாடசாலையில் 2022ம் ஆண்டு சாதரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ள தொண்ணூற்றி ஒரு மாணவர்களில் எழுபத்தொரு மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளார்கள்.
இவர்களில் நான்கு மாணவர்கள் 09 A சித்தியினையும் ஒரு மாணவன் 08A 1 C
சித்தியினையும் பெற்றுள்ளதுடன் ஏனையோர் தரமான
பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.
முதன்மை மாணவர்கள்
01. பழனியாண்டி ரொஷான் 09A
02. பாலகிருஸ்ணன் அபிஷான் 09A
03. பத்மநாதன் தர்ஷன் 09A
04. முரளீதரன் டிலக்ஷனா 09A
05. புpரபாகரன் டில்ஷான் 08A, 01C
தொடர்ச்சியாக 2017 ஆம் வருடம் முதல் ஐந்தாவது வருடமாகவும் 09A
சித்திகளை தக்கவைத்துக்கொண்டு ஹோல்புறூக் கோட்டத்தில் முதன்மை
பாடசாலையாக எமது கல்யியகம் பெருமை பெறுகிறது என்று பாடசாலையின் அதிபர் நல்லதம்பி முத்துக்குமார் தெரிவித்ததோடு வெற்றிகளுக்காக உழைத்திருக்கின்ற ஆசிரியர்கள்
மாணவர்கள் பெற்றோர்களுக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும்
தெரிவித்தார்.
அதேவேளை பாடசாலைக்கு பக்கபலமாக இருந்துள்ள வலய மற்றும் ,
கோட்டக் கல்வி பணிமனை உட்பட நலன்விரும்பிகளுக்கும் தனது நன்றிளை தெரிவித்தார்.