...
செய்திகள்

44 வயதுடைய நபர் ஒருவரை உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மோதி கீழே தள்ளி தப்பி சென்றுள்ளனர்

பசறை ஹிங்குருகடுவ வீதியில் முதலாவது மைல் கல்லுக்கருகே நேற்று முன்தினம் இரவு (10/11) வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த 44 வயதுடைய நபர் ஒருவரை ஹிங்குருகடுவ நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மோதி கீழே தள்ளி தப்பி சென்றுள்ளனர்

கீழே விழுந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்
மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

உந்துருளியை செலுத்திய நபர்கள் தப்பி சென்ற நிலையில் நேற்று காலை (11/11) பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உந்துருளியை செலுத்திய நபரும் உந்துருளியில் பயணித்த நபரும் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

30 வயதுடைய உந்துருளியை செலுத்திய நபரை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதுடன்
உந்துருளியில் பயணித்த மற்றுமொரு 25 வயதுடைய நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen