2023 மார்ச் 8ம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக நல நிறுவனங்களில் ஒன்றான லங்கா விஷன் எக்சன் பவுண்டேஷன் ஏற்பாட்டில் தலவாக்கலை லோகி மற்றும் கூம்வூட், மிடில்டன் ஆகிய தோட்டங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கான மகப்பேறு பராமரிப்பு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு லோகி மெடிக்கல் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் லங்கா விஷன் எக்சன் பவுண்டேஷன் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான துரைராஜா பிரசாந்தி, சுப்ரமணியம் கிரவுன்சன் மற்றும் டியா செர்லின் ஆகியோரும் தோட்ட நிர்வாகம் சார்பில் நலம்புரி அதிகாரி, CDO மற்றும் ஊருக்கு பொறுப்பான தாதியாரும் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் அவர்களுக்கான மகப்பேறு தொடர்பான தெளிவூட்டலும் வழங்கப்பட்டது.