கடந்த ஐந்தாம் திகதி ரிதிமாலியெத்த பிரதேச சபை தவிசாளர் நிஷாந்த ஜயசுந்தர ரிதிமாலியெத்த பிரதேச சபைக்கு சொந்தமான UP PS 5483 கெப் ரக வாகனத்தில் ஆந்தா உல்பத சந்தனாராமய விகாரைக்கு வழிபாட்டிற்கு செல்லும் போது விகாரைக்கு அருகாமையில் கெப் ரக வாகனத்தை நிறுத்தி விட்டு விகாரைக்கு வழிபாட்டிற்கு சென்று மீண்டும் திரும்புகையில் குறித்த வாகனம் சிலரால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக ரிதிமாலியெத்த பிரதேச சபை தவிசாளரினால் ரிதிமாலியெத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் தலைமறைவாகி இருந்த நிலையில் ரிதிமாலியெத்த பொலிஸாரினால் 39,42 வயதுடைய ஆந்தாஉல்பத பகுதிகளைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ராமு தனராஜா