மொ/ முத்தமிழ் வித்தியாலயம் கடந்த க. பொ. த (சா/த) பரீட்சையில் சிறந்த பெருபேற்றினை பெற்றதனை பாராட்டி,NLH Pvt ltd தலைவரும் சமூக சேவையாளரும், மலேசிய நாட்டு பிரபல வர்த்தகருமான அந்தனி அவர்களும், மிக பின்தங்கிய பிரதேசமான மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில் இருந்து தனது தனி முயற்சியால் கற்று உயர்ந்து இன்று பெயர் சொல்லி உதாரணம் காட்டும் நிலையில் தன்னை வணிகத்துறையில் வளர்த்துக்கொண்ட NLH Pvt ltd ன் (CEO) நிறைவேற்று பணிப்பாளர் எஸ் .ஞரனசேகரன் அவர்கள் தான் வளர்ந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய பள்ளித்தோழன் அதிபர் திரு எஸ் . கிளிட்டஸ்குமார் அவர்களின் சேவையை நேசித்து, அந்த பாடசாலை அபிவிருத்திக்காக கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.