...
செய்திகள்

45 வருடகாலமாக  முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்படும் மாட்டு பண்ணை..

45 வருடமாக முறையற்ற விதத்தில் காணப்படும் மாட்டு பண்ணை; நடவடிக்கை எடுக்குமாறு பாஸ்கர் கோரிக்கை.
விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா மீபிலிமான அரச விதை உருளைகிழங்கு நிலையத்தில் சுமார் 45 வருடங்களுக்கு மேலான மாட்டுபன்னையே இதுவாகும். 
இங்கு சுமார் 20 பசுமாடுகள் உட்பட சுமார் 54 கால் நடைகள் உள்ளன  நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 லீற்றர் பால் விற்பனைசெய்ய படுகின்றது. 
இங்கு இவ் கால் நடைகளின் கழிவுகளைக் விவசாயத்திற்கான உரமாக பயன் படுத்த படுகின்றது. 
ஆயினும் கால் நடைகளுக்கு தேவையான புற்கள் மிக மிக குறைவு அத்தோடு கால் நடைகளுக்கு தேவையான ஏனைய ஊட்ட சத்துக்கள்,உணவுகள் முறையாக கிடைப்பது இல்லை  கால் நடைகளின் இருப்பிடம் உடைந்தும் மழை காலங்களில் நீர் நிரம்பியும் கானப்படும் இதனால் வருடத்தில் சராசரியாக 3 ற்க்கு மேல் கால் நடைகள் இரறக்கின்றன, எனவே இவற்றை புனரமைப்பு செய்து சகல வளங்களும் வழங்க படுமாயின் சிறந்த பால் பன்னையாக மாற்ற முடியும் அத்தோடு நிரந்தர தொழில் இல்லா இளைஞர், யுவதிகளுக்க அரச தொழில் வாய்ப்பையும் வழங்கலாம் என விவசாய பொது சேவை சங்க நுவரெலியா மாவட்ட செயலாளர் எம் பாஸ்கர்  தெரிவித்தார்.
ஆர்கே கவிஷான்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen