செய்திகள்

450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பானின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணை குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், மக்களின் நன்மை கருதி 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் மட்டும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு பிரதான கோதுமை மா நிறுவனங்களில் மாவின் விலையை அதிகரித்துள்ளதாலேயே விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாண் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீரைத்தவிர ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. எனவே, ஒரு இறாத்தல் பாணை நூறு ரூபாய்க்கு விற்றால்தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இருந்தும் மக்களுக்காக சொற்பளவு அதிகரிப்பையே செய்துள்ளோம்.” – என்றார்.

Related Articles

Back to top button