ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம் பண்டாரவளை, பூனாகலை கபரகலை அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்
கருணையுள்ளம் கொண்டவனே கதிர்வேலா
காத்தருள வேண்டுமைய்யா எங்களையே என்றும்
தோல்வி பயம் இல்லாமல் நாம் வாழவேண்டும்
அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா
அருள் பொழியும் திருமுகத்தை உடையவனே கதிர்வேலா
அரவணைக்க வேண்டுமைய்யா எங்களையே என்றும்
துவழாத மனநிலையில் நாம் வாழவேண்டும்
அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா
நல்லவர்கள் உடனுறையும் நாயகனே கதிர்வேலா
ஆறுதலைத் தரவேண்டும் எங்களுக்கு என்றும்
வெற்றிமுகம் நோக்கி நாம் வாழவேண்டும்
அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா
கேட்டவரம் தந்தெமக்கு ஆற்றல் தரும் கதிர்வேலா
உன்காவலைத் தர வேண்டும் எங்களுக்கு என்றும்
உளநலமும், உடல்நலமும் பெற்று நாம் வாழவேண்டும்
அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா
ஆடியிலே விழாக்காணும் அற்புதனே கதிர்வேலா
ஆதரவைத் தர வேண்டும் எங்களுக்கு என்றும்
தைரியம் கொண்டோராய் நாம் வாழவேண்டும்
அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா
ஆல் அரசு அருகு கொண்டு அமர்ந்திருக்கும் கதிர்வேலா
அறிவு தந்து ஆற்றலையும் தர வேண்டும் எங்களுக்கு என்றும்
அஞ்சாமை கொண்டோராய் நாம் வாழவேண்டும்
அருளளிப்பாய் பூனாகலை கோயில் கொண்ட கதிர்வேலாயுதா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.