கண்டிமலையகம்விளையாட்டு

46ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சிவராஜன் மற்றும் கிருசாந்தினி தங்கப்பதக்கம் வென்று சாதனை!

46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டிகளில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன், வேலு கிருசாந்தினி ஆகிய இருவரும் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

தேசிய விளையாட்டு விழா மரதன் வரலாற்றில் தமிழர்கள் இருவர் வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.
இவர்கள் இருவருமே நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

முத்துசாமி சிவராஜன், நுவரெலியாவைச் செர்ந்தர். வேலு கிருஷாந்தினி உடபுசல்லாவையை சேர்ந்தவர்.
கதிர்காமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 50 பேரும் பெண்கள் பிரிவில் 22 பேரும் பங்குபற்றினர்.

ஆண்கள் பிரிவுக்கான மரதன் ஒட்டத்தை 2 மணித்தியாலங்கள், 29 நிமிடங்கள், 29 செக்கன்களில் நிறைவு செய்து சிவராஜா வெற்றிபெற்றார்.

மேல் மாகாணத்தைச் சேர்ந்த ரி. குணசேகர (2:32:14) வெள்ளிப் பதக்கத்தையும் வட மேல் மாகாணத்தைச் சேர்ந்த எஸ். குமார (2:33:45) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்கள் பிரிவுக்கான மரதன் ஓட்டத்தை 2 மணித்தியாலங்கள் 55 நிமிடங்கள், 30 செக்கன்களில் நிறைவுசெய்து கிருஷாந்தினி வெற்றிபெற்றார்.

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான எம். ஹேரத் (2:57:15) வெள்ளிப் பதக்கத்தையும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த டி. லியனகே (3:00:19) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

வட மாகாணத்தின் வவுனியாவைச் சேர்ந்த எஸ். ஹேமப்பிரியா (3:40:00) எட்டாவது இடத்தைப் பெற்றார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com