மலையகம்
கொட்டகலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைப்பு
கொட்டகலையில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடையாளம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் யதன்சைட் தோட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி எரிந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அது தொடர்பில் உரிமையாளர் பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
தீயினால் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளதோடு, குறித்த நபரின் வீட்டு பகுதியும் சிறிதளவு சேதமாகியுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் யாரும் இருக்கவில்லை தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.