செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவி வருவதால் நாட்டின் பல பகுதிகளில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button