அரசியல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பற்றி எழுதும் புத்தகத்திற்கு நாம் பெயர் வைக்கத் தயாராகவிருக்கிறோம்

“கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவை பற்றி எழுதும் புத்தகத்திற்கு நாம் பெயர் வைக்கத் தயாராகவிருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டியில் இடம்பெற்றள்ளது இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நேற்று ஜனாதிபதி கூறியிருந்தார் எங்கள் பிரதமர் பற்றி புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக எங்களுக்கு முடியும் அதற்கு ஒன்றல்ல பல பெயர்களை கொடுக்க கடந்த 3 வருடங்களில் நடந்த சம்பவங்களை வைத்து மண்வெட்டி, கால் விலங்கு இதைப் போன்று பல்வேறு பெயர்களை எம்மால் தர முடியும்.

நாங்கள் அமைச்சர்களாக இருக்கும் போது மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை செய்தோம் மண்வெட்டி மற்றும் கால் விலங்குகளை போட்ட போதும் நாங்கள் மக்களுக்கு சேவைகளை செய்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com