விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டிக் காலிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது..

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டிக் காலிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 41 ஆண்டுகள் காத்திருக்குப் பின் ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் பிரிவில் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. 

இன்று டோக்கியோவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றில் வலுவான பெல்ஜியம் அணியை சந்திக்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.


இந்த ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் முதலில் அச்சுறுத்தியது. கிரேட் பிரிட்டன் ஆதிக்கம் என்ற ஆட்டத்தின் போக்குக்கு எதிராக இந்திய அணி 7வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. டி சர்க்கிளுக்கு அருகில் பிரிட்டன் கோலுக்கு நெருக்கமாக சிம்ரன் ஜித் சிங் பந்தை பிரிட்டனிடமிருந்து வென்றெடுத்து தில்பிரீத் சிங்குக்கு அனுப்ப அவர் கோலுக்கு நெருக்கமான நிலையிலிருந்து கோலுக்குள் திணித்தார், இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

Related Articles

Back to top button