விளையாட்டு

498 ஓட்டங்களை குவித்து உலக சாதனை படைத்த இங்கிலாந்து!

நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது.

50 ஓவர்களில் 498 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து அணி இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அணி ஒன்று பெற்றுக் கொண்ட அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 481 ஓட்டங்களை பெற்று இந்த சாதனையை நிலைநாட்டியிருந்தது.

இந்நிலையில், சுமார் 4 வருடங்களின் பின்னர் தனது சாதனையை இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 498 ஓட்டங்களை குவித்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதேபோல், பில் சால்ட் 122 ஓட்டங்களையும், டேவிட் மாலன் 125 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

லியம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஆறு ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிக ஆறு ஓட்டங்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

Related Articles

Back to top button