...
விளையாட்டு

5 ஆம் நாள் மழையின் ஆட்டம் ; சமநிலையில் முடிந்தது முதல் டெஸ்ட்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இது 2 ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடர் இதுவாகும்.

தொடரின் முதல் ஆகஸட் 4 ஆம் திகதி நாட்டிங்காமில் ஆரம்பமானது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 183 ஓட்டங்களையும், இந்தியா 278 ஓட்டங்களையும் எடுத்தன. 

95 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3 ஆவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4 ஆவது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சில் 85.5 ஓவர்களில் 303 ஓட்டங்கள்  குவித்து ஆல்-அவுட் ஆனது. 

சதம் விளாசி அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய அணித் தலைவர் ஜோ ரூட் 109 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அவரின் 21 டெஸ்ட் சதம் இதுவாகும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen