செய்திகள்

5 ஆயிரம் ரூபா நிவாரண பொதி விநியோகத்தில் முறைகேடு : விசாரணை ஆரம்பம்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விநியோகத்தில், முறைகேடு இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் ஊடாக, மூன்று தரப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த குறிப்பிட்டுள்ளார். தரமற்ற பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு, இவ்வாறான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டாம் என பிரதேச செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். ஏதேனுமொரு பகுதியில், பொருள் விநியோகத்தில் முறைகேடு இடம்பெற்றிருப்பின், அது குறித்து பிரதேச செயலகத்திற்கோ, அல்லது உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கோ முறைபாடு செய்ய முடியும் என அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button