செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவுகின்ற அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, எலப்பாத்த, இரத்தினபுரி, கலவானை, குருவிட்ட, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, தெரணியகலை, வரக்காப்பொல, அரநாயக்க மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, மத்துகம, தொடாங்கொட புளத்சிங்கள மற்றும் காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

This image has an empty alt attribute; its file name is landslide_warning.jpg

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com