5 வயது சிறுமியை கடத்தி விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில், தலவாக்கலை-லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்கரபத்தனை போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த 5 வயதான சிறுமியை 2017 ஆம் ஆண்டு கடத்தி, விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டிலே ,தலவாக்கலை-லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை-லிந்துலை நகர சபையின் தலைவர் அனகிபுர அசோக சேபால,நகர சபையின் உறுப்பினர் பஹல விதானகே இஷார அனுருத்த மஞ்சநாயக்க உள்ளிட்ட நால்வரே நுவரெலியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.