செய்திகள்

5 வயது சிறுவனை களனி ஆற்றில் வீசிய தாய்!

வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயதுக் குழந்தையைக் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான குழந்தையின் தாய் நேற்று (15) இரவு ஊன்றுகோல் உதவியுடன் வந்து குழந்தையை களனி ஆற்றில் வீசி தானும் கங்கையில் குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, ​​அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் மூத்த மகன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.´5.20 மணியளவில் வீட்டில் இருந்து வௌியேறினார். எங்கே போகிறீர்கள் என கேட்டேன். எதுவும் பேச வில்லை. என்னை முறைத்து பார்த்து விட்டு சென்றார். அம்மாவுக்கு வலிப்பு நோய் உள்ளது. அம்மா செல்லும் போது அவரின் ஸ்டிக்கையும், தம்பியையும் மற்றும் வௌ்ளை துணியொன்றையும் எடுத்துச் சென்றார். காலையில் கண்ணாடியை பழுது பார்க்க என்னையும் அழைத்தார். நான் தயாராகி வந்து நானும் வருகிறேன் என கூறினேன். பின்னர் வர வேண்டாம் என கூறிவிட்டார். அம்மா என்னை விட தம்பி மீதுதான அதிகமாக பாசம் காட்டுவார். சிறு வயதில் பெனடோல் கொடுத்து என்னையும் கொல்ல பார்த்தார். அதனால் சித்திதான் என்னை பார்த்துக் கொண்டார். தம்பி மீது அதிக பாசம் வைத்துள்ளார். ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை.´

Related Articles

Back to top button