செய்திகள்

5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் பல்வேறு அடிப்படைகளில் சேவையாற்றும் 5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான வேலைத்திட்டத்துக்கு முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதற்காக தற்போது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் காணப்படும் வெற்றிடங்கள், அதற்கமைய சேவை மற்றும் சம்பள ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் திறைசேரியின் அனுமதியைப் பெறவேண்டுமெனவும் அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button