
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தில் இணைக்கும் வகையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட 50 மேலதிக கொடுப்பனவுக்கான யோசனை நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் வெளியாக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்தும் இன்னும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் குறித்த கொடுப்பனவு எந்த வழியிலேயேனும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
ஹாலிஎல அங்குருமலை தோட்டத்தில் 2 கோடிரூபாய் செலவில், குடிநீர் விநியோக வேலைத்திட்டம் ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.