செய்திகள்மலையகம்

50 ரூபாய்க்கு நவீன் முட்டுக்கட்டை – இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் இராதா.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவதாக கூறப்பட்ட 50 ரூபா மேலதிக தொகையை வழங்குவதில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க முட்டுக்கட்டையாக இருப்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அமைச்சரின் 67 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களான மனோ கணேசன் ,பழனி திகாம்பரம் , மயில்வாகனம் திலகராஜ் அரவிந்த குமார் ஆகியோர் தொடர்ச்சியாக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு சர்ச்சைக்கு பின்னர் 700 ரூபாய் சம்பள உயர்வுடன் , 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவு மலையக மக்களுக்கு பெற்றுத்தருவதாக கூறப்பட்டது.

அதற்கு அரசாங்கமும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் , அமைச்சர் நவீன் திஸாநாயக்க முட்டுக்கட்டையாக உள்ளமை கவலையளிக்கிறது.

நுவரலியா மாட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துக் கொண்டு மலையக மக்களின் உணர்வை அவர் புரிந்துக்கொள்ளவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நாம் எம்மை ஆதரிக்கின்ற அதாவது மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற  ஒரு தலைவருக்கே வாக்களிப்போம் என்றார்.

Related Articles

Back to top button