செய்திகள்

500 புதிய தொற்றாளர்கள்.

நாட்டில் மேலும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை
40 ஆயிரத்து 282ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இன்று 712 பேர் குணமடைந்தனர்.

அதன்பிரகாரம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 51 ஆக
அதிகரித்துள்ளது.

மேலும் எண்ணாயிரத்து 45 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று
வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button