500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொருளாதார மத்திய நிலையங்களின் மொத்த விலைகளின் பிரகாரம், 12 வகையான மரக்கறிகள் அடங்கிய பொதியொன்றை 500 ரூபா என்ற நிவாரண விலைக்கு வழங்க சிவில் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், வெயங்கொடை, தம்புள்ளை மற்றும் தம்புத்தேகம ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களிலிருந்து கொள்வனவு செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் மரக்கறிகளை, சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நடமாடும் லொறிகளின் ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, குறித்த நடமாடும் சேவை, மருதானை, பொரள்ளை, தெமட்டகொடை, பம்பலபிட்டி, கல்கிஸ்ஸை, நுகேகொடை, ஜா-எல, கம்பஹா, கடவத்தை, வத்தளை, கிரிபத்கொடை மற்றும் மாபோல ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படுவதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடமாடும் சேவையின் ஊடாக, சிவப்பு அரிசி, வெள்ளை சிவப்பு அரிசி, நாடு, கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளையும் நிவாரண விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் எந்தவொரு இடத்திற்கும் இந்த நடமாடும் சேவையை அழைக்க முடியும் என சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த நடமாடும் சேவையை அழைப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
லெப்டினன் கேர்ணல் ரத்நாயக்க :- 0740165006
கெப்டன் அபேசிங்க :- 0740165042
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், மக்களுக்கான சேவையை உரிய வகையில் வழங்கும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருப் பொருளுக்கு அமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
