மலையகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்ளத்தை உயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் தமது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் இதனை தெரிவித்துள்ளார்இ

தொடர்ந்தும் அவர் இது குறித்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பெருதோட்ட தொழிலாளர்களின் சம்பளவு உயர்வு கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாக கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்சம்பளவுயர்வு கோரி இலங்கை தொழிலாளர் காங்ரஸினால் முன்னெடுக்கப்படும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் தமது ஆதரவினை வழங்கியுள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளவுயர்வு கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் பலச்சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும் எவ்வித இனக்கப்பாடும் எட்டப்படவில்லை.

எனவே தொழிற்சங்கங்ளின் பலம் அவசியமாகின்றபடியால் அரசியல் தொழிற்சங்க முரண்பாடுகளை மறந்து அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் ஆதரவினை வழங்கவேண்டும்.

மலையக தொழிற்சங்கங்களின் கருத்து வேறுபாடுகள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஏதுவாக அமைந்து விடக்கூடாதொன்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button