...
செய்திகள்

53 வயதான குடும்பஸ்தார் குத்திக் கொலை

குருவிட்ட, தெப்பானவ பகுதியில் 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீண்டகாலமாக இருவருக்கு இடையில் இடம்பெற்று வந்த கருத்து வேறுபாடே கொலைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen