போதியளவு எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால், விநியோகம் வழமை போன்று தொடரும் எனவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் எரிபொருள் விநியோகம் நேற்று தடைப்பட்டிருந்தது.
எனினும் இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.